Monday, January 29, 2007

மாறித்தான் போய்விட்டது வாழ்க்கை!

ஆன்லைனில்
ஆண்டவனுக்கு
அர்ச்சனை செய்ய முடிகிறது! ஆனால்,
நேரில் சென்று
கூடி வழிபடுவது
குறைந்து போகிறது!

கழிவறையிலும்
கைத்தொலைபேசியில்
கலந்துரையாட முடிகிறது! ஆனால்,
எடுத்ததற்கெல்லாம் தொலைபேசி
குறுக்கீடுகள் கூடிப்போய்
நிம்மதி தொலைகிறது!

வரிசையில்
நிற்காமலேயே
வங்கிப்பணிகள்
சாத்தியம் ஆகிறது! ஆனால்,
மறைச்சொற்கள் தான்
அடிக்கடி மறந்து தொலைக்கிறது!

கைக்காசு
இல்லாமலேயே
அட்டையைத் தேய்த்து
ஆடம்பரம் வாங்கமுடிகிறது! ஆனால்,
பணம் கட்டும்போதுதான்
வட்டியும் முதலும்
கையைக் கடிக்கிறது!

வீட்டிலிருந்தே
அலுவலகப் பணியை
ஆற்ற முடிகிறது! ஆனால்,
விடுமுறையன்றும்
வேலை செய்து
வெறுத்துப் போகிறது!

வீட்டிலிருந்தே
சின்னத்திரை மூலம்
சினிமா டிராமா நாட்டுநடப்பை
தினமும் பார்க்க முடிகிறது! ஆனால்,
தொடர்ந்து பார்த்து
நேரம் தொலைத்து
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது
குறைந்து போகிறது!

போகிற இடங்களில்
ஏற இறங்க
எஸ்கலேட்டர்
உதவியாய் இருக்கிறது! ஆனால்,
கைகால்களுக்கு
இயற்கையான உடற்பயிற்சி கூட
இல்லாமல் போகிறது!

வளர்ந்துவரும்
அறிவியல் வளர்ச்சி
வாழ்க்கைக்கு வசதியைத் தருகிறது ஆனால்,
அளவுக்கு மேலே
அனுபவிக்கும் வசதியால்
ஆனந்தம் குறைகிறது!

1 comment:

சேதுக்கரசி said...

நண்பரே, இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Blogarama - The Blog Directory

[Valid Atom 1.0]